Monday, March 22, 2010

உலக தண்ணீர் தினம் - யாருக்கு அக்கறை???

உலக தண்ணீர் தினம் பற்றி நண்பர் ஸ்டார்ஜன் வலைப்பூவில் “உலக தண்ணீர் தினம் - கேள்விக்கு உங்க பதில் - 4” பின்னூட்டம் போடும் போது... ஒரு கொசுவத்தி சுத்திச்சு...

இதை ஏன் ஒரு இடுகையாப் போடக்கூடாது என என் மனசுல ஏற்பட்ட தாக்கம் இந்த இடுகை..

மடிப்பாக்கம் ஐயப்பா நகர் - 15 தெருக்களையும், 200 வீடுகளையும் கொண்ட அழகான நகர், ஒரு அழகான ஏரியையும் கொண்ட நகர். ஏரியின் மறுபக்கம் கார்த்திகேயபுரம் எனப்படும். ஏரியின் இன்னொரு பக்கம் பல்லாவரம் நகராட்சியின் ஏரிக் கரைத் தெரு. பக்கத்தில் ஏரி இருப்பதைப் பார்த்துதான் அங்கு நான் வீடு வாங்கினேன்.

அந்த ஏரிக்கு நீர் வரத்து பக்கத்தில் இருக்கும் மூவரசம்பட்டு குளம் நிறைந்தது, பின் இங்கு வரும்.

கடந்த சில வருடங்களுக்கு முன் அந்த ஏரியை சிலர் பட்டா போட்டு விற்க முயற்சித்த போது, சில நல்ல உள்ளங்கள் காரணமாக காப்பாற்றப்பட்டது. பின்னர் அந்த ஏரியில் இருந்த மண் எடுத்து ஏரி நன்கு ஆழப் படுத்தப்பட்டது. இப்போது ஏரியின் நடுவில் கிட்டதட்ட 30 அடி ஆழம் இருக்கும்.

இந்த ஏரிக்கு நீருக்கு என்ன என்ன கெடுதல் நடக்கின்றது என்று பாருங்க..

1. ஐய்யப்பா நகர், கார்த்திகேயபுரம் ( கார்த்திகேயபுரத்தில் ஏரிக்கு அருகில் இருப்பவர்கள் மட்டும்), பல்லாவரம் ஏரிக்கரை வாசிகள் அனைவருக்கும் குப்பை கொட்டும் இடம் இதுதான்.

2. ஐய்யப்பா நகர் சன்னதி தெரு, ஐயப்பா நகர் முதல் தெரு - இரண்டு தெருக்களின் சாக்கடைகள் சங்கமம் ஆவது ஏரியில்தான்.

3. மூவரசம்பட்டு சாக்கடைகள் சங்கமம் ஆவதும் இந்த ஏரியில்தான். நீர் வரத்துக்காக ஏற்பட்ட வழியாக இந்த சாக்கடைகள் கலந்துவிடும்.

4. பலருக்கும் காலைக் கடன் கழிக்குமிடம் ஏரிக் கரை தான்.

5. ஐந்தாவது தெரு என நினைக்கின்றேன், ஒரு பலமாடி அபார்ட்மெண்ட்டில் இருப்பவர்களுது செப்டிக் டேங்க், இரவில் பம்ப் மூலம் ஏரியில் விடப்படும்.

6. மூவரசம்பட்டு குப்பைகள் ஏரிக்கு நீர் வரும் வழியில் கொட்டி அடைக்கப்படும்.

சென்னையை விட்டு 2008 - ல் நைஜிரியா வரும் போது நான் பார்த்த போது, ஏரியில் கோரைப் புற்கள் வளர ஆரம்பித்து இருந்தது. 2009 -ல் போன போது... அந்த கோரைப் புற்கள் நன்கு வளர்ந்தது இருந்தது. இந்த மாதிரியான கோரைப் புற்கள் கெட்டுப் போன தண்ணீரில் தான் நன்கு வளரும்.

இதில் கொடுமையானது என்னவென்றால், ஐயப்பா நகருக்கு 3 கவுன்சிலர்கள். அவர்களுக்குள் .. அவர் செய்வார் என்று இவர் விட்டு விடுவார்... இவர் செய்வார் என அவர் விட்டு விடுவார்... கொடுமையடா சாமி...

முன்பு ஏரி நிரம்பியவுடன் அதிக பட்ட நீர் வெளியாக வழி இருந்தது. இப்போ அந்த வழி முழுவதும் அடைக்கப் பட்டு, தண்ணீர் நிரம்பி, தெருவெங்கும் ஒரே தண்ணீர். அந்த தண்ணீர் வடிய குறைந்தது 1 மாதம் ஆகின்றது... ரொம்ப பாவம் செய்தவர்கள் 11 தெரு முதல் 14 வது தெரு வரை இருப்பவர்கள்.

ஐயப்பா நகரில் வசிப்பவர்கள் பெரும் பகுதியினர் மேல் தட்டு வர்க்கத்தினராகத்தான் இருக்கின்றனர். அரசாங்கத்தில் பெரிய பதவியில் இருப்பவர்கள், இருந்தவர்கள், தனியார் நிறுவனங்களில் பெரிய பதவிகளில் இருப்பவர்கள் இப்படித்தான் இருக்கின்றனர். கார் இல்லாத வீடுகள் மிகக் குறைவு என்றே சொல்ல வேண்டும்.

உலக தண்ணீர் தினம் கொண்டாடும் போது, ஐயப்பா நகர் மக்கள் வேண்டுமானால் “உலக கண்ணீர் தினம்” கொண்டாடலாம்.

இங்க கொஞ்சம் சுய தம்பட்டம்...

என்னோட வீட்டில் சரியான மழை நீர் சேகரிப்பும், வீட்டைச் சுற்றி மரங்களும் வளர்த்துள்ளேன்.. இதில் நான் நெஞ்சு நிமிர்த்தி பெருமையாகத்தான் சொல்லுகின்றேன்.

உலகத் தண்ணீர் தினத்தன்று மட்டும் தண்ணீரைப் பற்றி நினைக்காமல், சிக்கனமாக இருந்தால், வருங்கால சந்ததியருக்கு நன்று.

தண்ணீர் சிக்கனம் தேவை இக்கணம்..

52 comments:

Starjan (ஸ்டார்ஜன்) said...

ராகவன் அண்ணே!

கலக்கிட்டீங்க போங்க.. உங்க கருத்து நியாயமானதுதான்.

ராம்ஜி_யாஹூ said...

நீங்க மடிப்பாக்கம் அய்யப்ப நகர், ஐயப்பன் கோயில் பக்கம் போய் வருடங்கள் பல இருக்கும் என நினைக்கிறேன்.

இப்போது அங்கே சிறுநீர், மலம் கழிப்பதோ, குளிப்பதோ, துவைப்பதோ தடை செய்யப் பட்டு உள்ளது. மூவரசம் பட்டு குப்பைகள் எடும் அங்கே கொட்டப் படுவதை தெரிய வில்லை.

நீங்கள் ஐயப்பன் கோயில் எதிரில் உள்ள எரியைதானே சொளுகிரீர்கள், பொன்னியம்மன் கோயில் பஸ் ஸ்டாப்பிற்கு அடுத்த பஸ் ச்டாப்பான அய்யப்பன் கோயில் பஸ் ஸ்டாப், அதன் அடுத்து யு டி ஐ (அக்சிம்) பேங்க்.

ராம்ஜி_யாஹூ said...

or are you referring the lake near sadhasivam nagar (after the balaiya garden stop, ) oppsoite to ajay vijay readymade shop. which lake r u referring, but there to no gabbage dumping now.

ராம்ஜி_யாஹூ said...

or are you referring the lake near sadhasivam nagar (after the balaiya garden stop, ) oppsoite to ajay vijay readymade shop. which lake r u referring, but there to no gabbage dumping now.

இராகவன் நைஜிரியா said...

நன்றி ஸ்டார்ஜன்..

இராகவன் நைஜிரியா said...

நன்றி ராம்ஜி யாஹூ...

நான் சொல்வதும் நீங்க சொல்லும் அதே ஐயப்பா நகர்தான்.

என்னோடுய சொந்த வீடு 13 வது தெருவில் இருக்குங்க.

நான் கடந்த ஜூலை 2009 - ல் பார்த்ததை வைத்து எழுதியது. ஜூலை 2010 -ல் வருகின்றேன். நீங்க சொல்வதை பார்க்கும் போது, நல்ல நிலைமையில் இருக்கும் ஏரியைப் பார்க்க ஆசையாக இருக்குங்க.

இப்போ முன்னேற்றம் ஏற்பட்டு இருக்கு என கேட்க ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு. இது நிலைக்க வேண்டும்.

சதாசிவம் அருகில் இருக்கும் ஏரி - அது இன்னும் மோசமாக பராமரிக்கப் படும் ஏரி. அஜய் விஜய் அபார்ட்மெண்ட் செப்டிக் டேங்க் தண்ணி எல்லாம் ரோடில் ஓடி அந்த ஏரியில் தான் கலக்கும்.

எனக்கு தெரிந்து அந்த கார்னர் ரோடை பல தடவை சரி செய்து இருக்கின்றார்கள்.

venkat said...

நண்பரே நல்ல பதிவு வாழ்த்துக்கள்

நசரேயன் said...

//தண்ணீர் சிக்கனம் தேவை இக்கணம்//

மிச்ச படுத்தின சரக்கை எல்லாம் எனக்கு அனுப்பிவையுங்க

சிநேகிதன் அக்பர் said...

கட்டுரை அருமை.

ராகவன் சார் உங்க இன்ஸ்டிங்ட் முன்னாடியே சொல்லியிருக்கு மரம் வளர்க்க சொல்லி. :)

முகுந்த்; Amma said...

சரியான ஆதங்கம். இதேபோல நெறைய ஆறுகள், ஏரிகள், குப்பைகூடமாகி சாக்கடையாக்கபட்டு விட்டன என்பது கசப்பான உண்மை. இதனை அரசியல்வாதிகள் அறிவது எப்போது?

நேசமித்ரன் said...

அண்ணே

தண்ணீர் தினம் விட கண்ணீர் தினம்னு சொல்றது பொருத்தமா இருக்கு

ஆனா பின்னிட்டிங்க போங்க

Raghu said...

//இங்க கொஞ்சம் சுய தம்பட்டம்//

'க‌ர்வ‌முட‌ன் சொல்லிக்கொள்கிறேன்'னே சொல்லியிருக்க‌லாம் சார், You deserve it, வெரி நைஸ் :)

Thenammai Lakshmanan said...

உண்மைத்தான் ராகவன் தண்ணீர் சிக்கனம் தேவை இக்கணம்

ப்ரியமுடன் வசந்த் said...

//இதில் கொடுமையானது என்னவென்றால், ஐயப்பா நகருக்கு 3 கவுன்சிலர்கள். அவர்களுக்குள் .. அவர் செய்வார் என்று இவர் விட்டு விடுவார்... இவர் செய்வார் என அவர் விட்டு விடுவார்... கொடுமையடா சாமி...//

ஹா ஹா ஹா

அக்கறையுடன் கூடிய பதிவு...

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நல்ல பதிவுங்க..

மக்கள் எல்லாரும் பால் ஊத்தும்போது நான் மட்டும் தண்ணீர் ஊத்தினா தெரியப்போதான்னு எல்லாரும் தண்ணி ஊத்தின கதை மாதிரி.. சாக்கடையும் செப்டிக் டேங்கும் ஏரியில் கரைக்கலாம்ன்னு முடிவு செய்யறாங்க.. அப்பறம் அந்த சாக்க்டைக்கு நடுவில் அசிங்கத்துக்கு நடுவில் தான் வாழப்போறம்ன்னு எப்பங்க புரியப்போது :(

ராம்ஜி சொல்றாரே இப்ப தடை செய்யப்பட்டிருக்குன்னு ஒருவேளை ரொம்ப அசிங்கமாகிடுச்சு துவைச்சு குளிச்சா கெடுதல்ன்னு த்டை போட்டிருப்பாங்களோ :)

Kumky said...

நான் கூட எதோ ஏரிதான் வெட்டி ஒருவாக்கிட்டீங்களோ அப்படீன்னு நெனச்சிட்டேன்....
:)))
ஏண்ணே.,
சென்னையில இன்னும் ஏரில்லாம் இருக்கா...?

அண்ணாமலையான் said...

நல்ல பதிவு

சைவகொத்துப்பரோட்டா said...

நல்ல விழிப்புணர்வு கட்டுரை.

ஜெய்லானி said...

சென்னையில , இன்னும் ஏரில்லாம் கூட விட்டு வச்சிருக்காங்களா ? அட ப்பாவமே!!

நட்புடன் ஜமால் said...

சேவையென்றால் அவன் செய்வான் இவன் செய்வான் பணம் வாங்க மட்டும் “நான்” “நான்” “நான்”

இவிங்க திருந்தவே மாட்டாய்ங்க...

ஸ்ரீ.... said...

அண்ணே,

அருமையான, நேர்மையான இடுகை. உங்க பின்னூட்டமில்லாம நம்ம கடை கலகலப்பில்லாம இருக்கு. கொஞ்சம் கவனிங்க.

ஸ்ரீ....

Anonymous said...

thenammailakshmanan said...
உண்மைத்தான் ராகவன் தண்ணீர் சிக்கனம் தேவை இக்கணம்

ர‌கு said...
//இங்க கொஞ்சம் சுய தம்பட்டம்//

'க‌ர்வ‌முட‌ன் சொல்லிக்கொள்கிறேன்'னே சொல்லியிருக்க‌லாம் சார், You deserve it, வெரி நைஸ் :)

யானும் இதையே சொல்லிக்கிறேன் அண்ணா..

goma said...

விழவேண்டியவர்கள் காதில் விழுந்து ஆவன செய்யப்பட்டால் நல்லது..

malar said...

வருங்காலங்களை பற்றி நினைக்கும் போது ரொம்ப கவலையாக தான் இருகிறது.

லாரி தண்ணீரை எதிற் பார்து இருந்த காலங்களும் உண்டு...

த்ண்ணீரை பற்றிய விழிபுணர்வு ஒவ்வோருவரையும் சென்று அடைய வேண்டும்...

ரோஸ்விக் said...

//என்னோட வீட்டில் சரியான மழை நீர் சேகரிப்பும், வீட்டைச் சுற்றி மரங்களும் வளர்த்துள்ளேன்.. இதில் நான் நெஞ்சு நிமிர்த்தி பெருமையாகத்தான் சொல்லுகின்றேன்.
//

பெருமையாகவோ, கர்வமாகவோ, சுய விளம்பரமாகவோ சொல்லப்பட வேண்டியா விஷயம் தான் அண்ணே! மகிழ்ச்சி. :-)

தமிழ் உதயம் said...

இங்க கொஞ்சம் சுய தம்பட்டம்...

என்னோட வீட்டில் சரியான மழை நீர் சேகரிப்பும், வீட்டைச் சுற்றி மரங்களும் வளர்த்துள்ளேன்.. இதில் நான் நெஞ்சு நிமிர்த்தி பெருமையாகத்தான் சொல்லுகின்றேன்.


இந்த சுயதம்பட்டத்தை எல்லோரும் அடித்து கொள்ள வேண்டும் என்பதே நம் ஆசை. நேர்மையாக இருப்பதில் கிடைக்கிற சந்தோஷம் இது தான்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

கலக்கிட்டீங்க

கண்ணா.. said...

நல்ல இடுகை அண்ணே..

மழைநீர் சேகரிப்பும் தண்ணீர் சிக்கனமும் தற்போது மிக மிக அவசியமான ஓன்று

வடுவூர் குமார் said...

நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோவிலுக்கு பக்கத்தில் ஒரு குளம் இருந்தது அது படிப்படியாக காணாமல் போய் இப்போது அதன் மேல் வேளச்செரி ரோடு போகுது.நீங்கள் சொல்லியுள்ள அவ்வளவு கொடுமையும் அங்கும் நடந்தது.

vasu balaji said...

அண்ணே! இந்த வாட்டி வரப்போ ஏரிப் படம் போடலாம்ணே:).

நிஜாம் கான் said...

அண்ணே! நீங்க சொல்லியிருக்கிற பிரச்சனை மட்டுமல்ல! இனி வரும் காலங்களில் அகில உலகத்திற்கும் கண்ணீர் தினம் தான். மிகச்சிறப்பா சொல்லியிருக்கீங்க.

நிஜாம் கான் said...

நான் கூட தண்ணீர் தினம்னதும் வேற(?) என்னமோ நெனச்சேன். அந்த தண்ணிக்கு எப்பவுமே பஞ்சம் வராது அண்ணே!??????

Anonymous said...

சரியான பார்வை..தண்ணீர் தினம் சரியான பதிவு

Joe said...

அருமையான இடுகை, ராகவன் அண்ணா!

பத்து வருடத்துக்கு முன்னால திருச்சி-ல குழாயில வர்ற தண்ணியைத் தான் குடிச்சேன். இப்போ அங்கேயும் சரி, தமிழ்நாட்டின் மற்ற நகரங்களிலும் சரி, தண்ணியே குடிக்க முடியல.

எல்லா நீர் நிலைகளையும் அசுத்தப்படுத்தி, பாட்டில் தண்ணீர் தான் குடிக்கனும்கிற நிலைமைக்கு நம்மள நாமே தள்ளிட்டோம். அதையுமே காய்ச்சி தான் குடிக்க வேண்டிருக்கு, பல பேரு கிணத்து தண்ணிய பாட்டில்-ல ஊத்தி வித்திடுறாங்க ;-)

Radhakrishnan said...

கண்ணீர் தினம், தண்ணீர் தினம். நல்லதொரு இடுகை.

அப்துல்மாலிக் said...

துபாயிலேக்கூட தண்ணீர் பாட்டில் கழுத்தில் சுருக்கு கயிறு மாட்டி What will be NEXT??? என்று கேட்டு அங்கங்கே போர்ட் இருக்கும்

நிச்ச்யமா இது யோசிக்கவேண்டி அமுல்படுத்தப்பட வேண்டிய விடயம்

பனித்துளி சங்கர் said...

சமூக அக்கறை உள்ள சிறந்த பதிவு . பகிர்வுக்கு நன்றி !

பனித்துளி சங்கர் said...

////////////நேசமித்ரன் said...
அண்ணே

தண்ணீர் தினம் விட கண்ணீர் தினம்னு சொல்றது பொருத்தமா இருக்கு

ஆனா பின்னிட்டிங்க போங்க /////////


இதுதான் இன்றைய நிலை . சரியாக சொல்லி இருக்கீங்க நண்பரே

மாதேவி said...

நல்ல பதிவு.
"சிக்கனமாக இருந்தால், வருங்கால சந்ததியருக்கு நன்று ".ஒவ்வொருவரும் கடைப்பிடிக்க வேண்டியது.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//முன்பு ஏரி நிரம்பியவுடன் அதிக பட்ட நீர் வெளியாக வழி இருந்தது. இப்போ அந்த வழி முழுவதும் அடைக்கப் பட்டு, தண்ணீர் நிரம்பி, தெருவெங்கும் ஒரே தண்ணீர். அந்த தண்ணீர் வடிய குறைந்தது 1 மாதம் ஆகின்றது... //

ஏரியில் இருக்க வேண்டிய தண்ணீர்,
தெருவில்தான் இருக்குது.
தங்கள் மனக்குமுறலை, மனக்குரலை
பதிவில் சிறப்பாய் வெளிப்படுத்தினீர்கள்!

இராகவன் நைஜிரியா said...

@@ venkat நன்றி

@@ நசரேயன் நன்றி
-மிச்சமிருந்துச்சுன்னா உங்களுக்குத்தான்

@@ அக்பர் நன்றி

@@ முகுந்த் அம்மா - நன்றி

@@ நேசமித்ரன் நன்றி

@@ ர‌கு நன்றி

@@ thenammailakshmanan நன்றி

@@ பிரியமுடன்...வசந்த் நன்றி

@@ முத்துலெட்சுமி/muthuletchumi நன்றி
// ராம்ஜி சொல்றாரே இப்ப தடை செய்யப்பட்டிருக்குன்னு ஒருவேளை ரொம்ப அசிங்கமாகிடுச்சு துவைச்சு குளிச்சா கெடுதல்ன்னு த்டை போட்டிருப்பாங்களோ :) // இருக்கலாம்..

@@ கும்க்கி
// ஏண்ணே.,
சென்னையில இன்னும் ஏரில்லாம் இருக்கா...? // இன்னும் சில ஏரிகள் பாக்கி இருக்குங்க..

@@ அண்ணாமலையான் நன்றி

@@ சைவகொத்துப்பரோட்டா நன்றி

@@ ஜெய்லானி நன்றி
//சென்னையில , இன்னும் ஏரில்லாம் கூட விட்டு வச்சிருக்காங்களா ? அட ப்பாவமே!! // ஆமாங்க தெரியாம பண்ணிடாங்க..

@@ நட்புடன் ஜமால் நன்றி

@@ ஸ்ரீ.... நன்றி
// அண்ணே,

அருமையான, நேர்மையான இடுகை. உங்க பின்னூட்டமில்லாம நம்ம கடை கலகலப்பில்லாம இருக்கு. கொஞ்சம் கவனிங்க.

ஸ்ரீ.... // நிச்சயம் வரேங்க...

@@ தமிழரசி நன்றி

@@ goma நன்றி

@@ malar நன்றி

@@ ரோஸ்விக் நன்றி

@@ தமிழ் உதயம் நன்றி

@@ T.V.ராதாகிருஷ்ணன் நன்றி

@@ கண்ணா.. நன்றி

@@ வடுவூர் குமார் நன்றி
// நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோவிலுக்கு பக்கத்தில் ஒரு குளம் இருந்தது அது படிப்படியாக காணாமல் போய் இப்போது அதன் மேல் வேளச்செரி ரோடு போகுது.நீங்கள் சொல்லியுள்ள அவ்வளவு கொடுமையும் அங்கும் நடந்தது.// அதே கொடுமை ஆதம்பாக்கம் ஏரிக்கும் இப்ப நடந்து கிட்டு இருக்குதுங்க.

@@ வானம்பாடிகள் நன்றிங்க அண்ணே..

//அண்ணே! இந்த வாட்டி வரப்போ ஏரிப் படம் போடலாம்ணே:)// நிச்சயமா செஞ்சுடலாமண்ணே..

@@ இப்படிக்கு நிஜாம்..,நன்றி

@@ ஆர்.கே.சதீஷ்குமார் நன்றி

@@ Joe நன்றி

// பத்து வருடத்துக்கு முன்னால திருச்சி-ல குழாயில வர்ற தண்ணியைத் தான் குடிச்சேன். இப்போ அங்கேயும் சரி, தமிழ்நாட்டின் மற்ற நகரங்களிலும் சரி, தண்ணியே குடிக்க முடியல.

எல்லா நீர் நிலைகளையும் அசுத்தப்படுத்தி, பாட்டில் தண்ணீர் தான் குடிக்கனும்கிற நிலைமைக்கு நம்மள நாமே தள்ளிட்டோம். அதையுமே காய்ச்சி தான் குடிக்க வேண்டிருக்கு, பல பேரு கிணத்து தண்ணிய பாட்டில்-ல ஊத்தி வித்திடுறாங்க ;-) // சரியாச் சொன்னீங்க ஜோ..

@@ V.Radhakrishnan நன்றி

@@ அபுஅஃப்ஸர் நன்றி

@@ ♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫
நன்றி
//பேருந்துக் காதல்..! - (தொடர் பதிவு)

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். அனைவரையும் தொடருக்கு அழைக்க ஆசைதான். நான் இப்போது இப்பதிவு குறித்து தொடர்பதிவு எழுதிட கீழ்கண்ட 10 நண்பர்களை நட்புடன் அழைக்கின்றேன் உங்களின் காதல் நினைவுகளை மறைவின்றி இந்த தொடர் பதிவின் வாயிலாக பகிந்துகொள்ளுமாறு அன்புடன் வேண்டிக்கொள்கிறேன்.
Cheena (சீனா)
கேபிள் சங்கர்
ஈரோடு கதிர்
Butterfly சூர்யா
இராகவன், நைஜிரியா
விக்னேஷ்வரி
சேட்டைக்காரன்
வெற்றி
பிரேமா மகள்
பிரவின்குமார்

நீங்கள் ஒவ்வொருவரும் நண்பர்களை அழைக்க வேண்டுகிறேன்.
http://wwwrasigancom.blogspot.com/2010/03/blog-post_23.html //

டைம் கொடுங்க... போட்டுடுவோம்.

@@ மாதேவி நன்றி

@@ NIZAMUDEEN நன்றி

இளமுருகன் said...

Everyone must think about this.Don't waste water. Thanks for your sharing useful one.

Chitra said...

என்னோட வீட்டில் சரியான மழை நீர் சேகரிப்பும், வீட்டைச் சுற்றி மரங்களும் வளர்த்துள்ளேன்.. இதில் நான் நெஞ்சு நிமிர்த்தி பெருமையாகத்தான் சொல்லுகின்றேன்.

.......... Right!
ஒவ்வொருவரும் தன் பங்கை செய்தாலே போதும். சிறு துளி - பெரு வெள்ளம்.

Anonymous said...

நல்ல பதிவு நண்பரே

Jaleela Kamal said...

\லாரி தண்ணீரை எதிற் பார்து இருந்த காலங்களும் உண்டு//

ஆமாம் மலர் சொன்னது போல் ஒரு காலத்தில் தண்ணீர் லாரி வந்தா தான் உண்டு,

இப்ப உள்ள் சந்ததினர்களுக்கு தண்ணீர் கழ்ட பற்றி ஒன்றுமே தெரியாது.

ஓவ்வொருவரும் இதை பற்றின விழிப்புணர்வு கண்டிப்பா இருக்கனும்

Jaleela Kamal said...

தண்ணீர் சிக்கனத்தை ஓவ்வொருவரும் கடை பிடிக்கனும், பிள்ளைகளுக்கும் சொல்லி கொடுகக்னும்

மின்மினி RS said...

அருமையான இடுகை ராகவன் சார்,

நான் புதிதாக வலைப்பூ ஆரம்பித்து சில இடுகைகள் வெளியிட்டுள்ளேன். உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

கபீஷ் said...

Very good post! Thanks for sharing

கவிதன் said...

உலகத் தண்ணீர் தினத்தன்று மட்டும் தண்ணீரைப் பற்றி நினைக்காமல், சிக்கனமாக இருந்தால், வருங்கால சந்ததியருக்கு நன்று.

மிகச் சரியாகச்சொன்னீர்கள் ராகவன் அண்ணா!!! மரம் வளர்ப்போம்... மழை பெறுவோம்!!!

Unknown said...

Dear Raghavan Sir,

Not only in Ayyappa Nagar Lake...Same thing happen in Sheela Nagar Lake also...

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

சுற்றுப் புறத்தை மாசு படுத்துவதில் மனிதனுக்கு நிகர் மனிதன் தான்! மிருகங்கள் கொஞ்சமாவது மனசாட்சிப் படி நடந்து கொள்ளும்!

Kiruthigan said...

நல்லா உறைக்கிற மாதிரி சென்னீங்க..!