Saturday, March 20, 2010

கேரக்டர் - மிஸ்டர் எக்ஸ்...

அண்ணன் வானம்பாடிகள் கேரக்டர் பற்றி எழுதும் போது, எனக்கும் தெரிஞ்ச ஒரு கேரக்டர் பற்றி சொல்ல வேண்டியிருக்கு.. பொய்யும், துரோகமும் சேர்ந்து மனிதனை அழித்த விதம்...

அவர் பெயர் எக்ஸ்... (அவரும் இதைப் படிச்சுகிட்டு இருப்பார் ... அதனால் தான்...)

ரொம்ப நல்லவர், அடுத்தவங்களுக்கு உதவி செய்யணும் அப்படின்னு ரொம்ப ஆசைப் படுவார், வேலை தெரியாவிட்டாலும் கத்துகிட்டு செய்யணும் ஆசைப் படுவார்... ஒரே ஒரு கஷ்டம்... ரொம்ப பொய் சொல்லுவார். பொய் சொல்வதில் எனக்குத் தெரிந்த வரையில் அவரை அடிச்சுக்க ஆளே கிடையாது.

எவ்வளவு சம்பளம் வாங்கினாலும்... கிட்ட தட்ட ரூ. 30,000/- வாங்கினாலும், சம்பளம் வாங்கிய மறுநாள் மதிய சாப்பாட்டுக்கு பணம் இருக்காது. எந்த விதமான கெட்ட பழக்கங்களும் எனக்குத் தெரிஞ்சு கிடையாது. பல நண்பர்களிடம் விசாரித்த வரையில் எந்த கெட்டப் பழக்கமும் கிடையாது. மனைவியையும் பிரிந்து வாழ்கின்றார். எங்கய்யா வாங்கின சம்பளம் என்றால் எல்லாம் செலவழிஞ்சு போச்சு அப்படின்னு சொல்லுவார். ரொம்ப தோண்டி, துருவி கேட்ட பின், கடன் அட்டை, ஏசி கடனில் வாங்கியது என்று ஏகப்பட்ட கடன் வச்சு இருப்பார். ஏசி வாங்கி இருக்கார் ஆனால் வீட்டில் ஏசி கிடையாது.

ஆபிசுக்குள் உட்கார்காந்துகிட்டே, பாங்கில் இருந்து வரும் ஆட்களுக்கு அவர் ஆபிசில் இல்லை என்று பியூனை விட்டு சொல்லச் சொல்லுவார்..

பாங்க் ஆட்களும் காலையில் இருந்து சாயங்காலம் வரைக்கும் ஆபிசில் ரிசப்ஷனில் உட்கார்ந்து முயற்சித்த நாட்கள் உண்டு. பாத்ரூம் கூட போகாமல் தன் இடத்திலேயே உட்கார்ந்துப்பார்.

பணத்திற்காக சொல்லும் பொய்கள்...

குழந்தைகள் படிப்பிற்காக பணம் கட்ட வேண்டும்
மாமியாருக்கு உடம்பு சரியில்லை
மனைவிக்கு உடம்பு சரியில்லை
அவருக்கே உடம்பு சரியில்லை

எல்லாவற்றையும் விட கொடுமையானது... குழந்தைக்கு ஆக்சிடெண்ட் என்றும், கை முறிந்துவிட்டது என்றும் சொல்லி பணம் கடன் வாங்கியதுதான். உண்மையில் குழந்தைக்கு ஒன்றுமே ஆகவில்லை.

அவர் மனைவியும் பொருத்துப் பொருத்து பார்த்து, விவாகரத்து வாங்கிட்டுப் போயிட்டார்.

அவர் வேலை செய்த கம்பெனி பங்குதாரர்களுக்குள் தகராறு வந்து மூடிவிட்டார்கள். அவருக்கு மேலதிகாரியாக வேலைப் பார்த்தவருக்கு, இவருடைய தில்லுமுல்லுகள், பொய் அனைத்தும் தெரியும். தெரிந்து இருந்தும், இவருக்கு ஒரு இடத்தில் மாசம் ரூ. 25,000/- கிடைக்கும் படி வேலை வாங்கிக் கொடுத்தார்.

இந்த இடத்தில் அவர் வேலை செய்யும் கம்பெனிக்கு விசுவாசமாக இருக்க முடியாமல், அவர்களுக்கு எதிராக வேலை செய்து, அவர்களும் வீட்டுக்கு அனுப்பிவிட்டார்கள்.

பொய் சொல்லி, சொல்லி வாழ்க்கையை வீணாக்கிவிட்டார்.

இப்போது இவருக்கு எதாவது உதவி செய்ய வேண்டும் என்றாலும், இவ்வளவு பொய் சொல்கிறவருக்கு எப்படி உதவுவது. வாழ்க்கையில் குறைந்த பட்சம் ஒருவரிடமாவது உண்மை பேச வேண்டும். வாயைத் திறந்தாலே பொய் என்றால் இப்படித்தான் ஆகும் என்பதற்கு ஒரு உதாரணம் இந்த நண்பர்(?) தான்.

இந்த இடுகை, சமீபத்தில் அந்த நண்பர்(?) அவர் வேலை செய்யும் நிறுவனத்திற்கு எதிராக செயல் பட்டு, வேலை நீக்கம் செய்யப்பட்டார் எனக் கேள்விப் பட்டதினால் வந்த இடுகை. கோர்வையாக எழுத வரவில்லை. அவர் வேலை செய்த நிறுவனம் பற்றியும், அங்கு இவரை எப்படி மிக நன்றாக கவனித்துக் கொண்டார்கள் என்பதும் எனக்கு நன்குத் தெரியும். அவர்களே இவரை வேலையை விட்டு தூக்குகின்றார்கள் என்றால், இவரின் பொய் & துரோகம் எப்படி இருக்கும் என நினைத்துப் பார்க்க முடியவில்லை. ஒரு நண்பரிடம் அந்த நிறுவனத்தைப் பற்றி பேசி கொண்டு இருக்கும் போது, முதலாளி ரொம்ப நல்லவர், கம்பெனியில் திருடியவனைக் கூட மன்னிச்சு விட்டுவிடுவார்... ஆனால் துரோகத்தை அவரால் மன்னிக்க முடியவில்லை என்றார்.

பணத்திற்காக பொய் சொல்லி அதுவே வாழ்க்கையாகி, இப்போ துரோகம் செய்யும் நிலைமைக்கு வந்து, வாழ்வை அஸ்தமிக்க வைத்துவிட்டது.

82 comments:

vasu balaji said...

அண்ணே! எல்லா ஆஃபீஸிலயும் இப்படி ஒன்னு இருக்குமா? படிச்சதும் இவரை விட மோசமா இன்னோரு கேரக்டர் கண்முன் வருது. பாவம் பார்த்தவனுக்கு பாவத்த சேர்த்து வச்சிடுவாங்க.

இனிமே இப்படி அடிக்கடி ஒரு இடுகை போட்டாவணும். இல்லாட்டி பின்னூட்டம் பெறுவோர் சங்கம் மூலம் பின்னூட்டப் போராட்டம் நடை பெறும்.

vasu balaji said...

ஆஹா. மீ த ஃப்ரஸ்ட்:)

நட்புடன் ஜமால் said...

என்னத்த சொல்ல

-------------

வானம்பாடிகள் சொன்னது போல அடிக்கடி ஒரு இடுக்கை போடுங்க ஆனா இந்த மாதிரியல்ல

வழமை போல

T.V.ராதாகிருஷ்ணன் said...

//பணத்திற்காக பொய் சொல்லி அதுவே வாழ்க்கையாகி, இப்போ துரோகம் செய்யும் நிலைமைக்கு வந்து, வாழ்வை அஸ்தமிக்க வைத்துவிட்டது.//

Super Lines

நேசமித்ரன் said...

துரோகத்தின் நகக்கண் இருபதும் நெற்றிக்கண் ஆகும்

நின்று கொண்டிருக்க கடவுளர்கள் ஆயுதங்கள் அதிகம் தாங்கிக் கொண்டிருப்பதால் ஆடமேடெட் மெஸேஜ் போலத்
தீர்ப்புகள் உடனுக்கு உடன்

அடிக்கடி இடுகை போடாட்டி அபூஜாவுக்கு பஜாஜ் ஆட்டோ ஏரியா பாய்ஸ் உடன் அனுப்பப்படும் என்று தெரிவிக்கப் படுகிறது

- நைஜீரியா வலை பதிவர் சங்கத்தின் லாகோஸ் கிளை

கலகலப்ரியா said...

இப்டி நிறைய உண்டு...~ சில பேரு... தும்மினா கூட தும்மினேன்னு சொல்ல மாட்டாங்க... ஏன்னு தெரியலை... ராகவன் கிட்ட இப்டி ஒரு காரமான இடுகை... வெரி குட்... வெரி குட்டு...

ப்ரியமுடன் வசந்த் said...

பாவம்தான் அவர் குடும்பம்..

:(

ஸ்ரீராம். said...

எங்கள் அலுவலகத்தில் கூட இப்படி ஒரு கேரக்டர் உண்டு. ஒரு டீக்காக எதை வேண்டுமானாலும் செய்யும், சொல்லும் கேரக்டர்...ஆனால் வசதிக்கு ஒன்றும் குறைச்சல் இல்லை..

ஜெய்லானி said...

சார், இவர் ஏன் இப்படிஆனார் என்ற காரணத்தை சொல்லி இருந்தால் நல்லா இருக்கும். ஏன் என்றால் எந்த கெட்ட பழக்கமும் இல்லாதவர் இப்படி ஆவது விசித்திரம்..

SUFFIX said...

அவரை நினைத்தால் பாவமாக இருக்கிறது, ஏதோ ஒரு சூழ்நிலை தான் இப்படி அவரை மாற்றியிருக்கவேண்டும்.

Thenammai Lakshmanan said...

உண்மை ராகவன் இப்படியும் சிலர் இருக்கத்தான் செய்யிறாங்க என்ன செய்ய இந்த மாதிரி நிலை வந்த பின்பாவது மாறவேண்டும்

சைவகொத்துப்பரோட்டா said...

இந்த குணம் கொண்ட ஆட்கள் நிறைய இருக்கிறார்கள் என நினைக்கிறேன், நானும்
பார்த்திருக்கிறேன் இதே போன்ற நபரை(களை!!).

Unknown said...

இந்த குணம் உள்ளவர் என நெருங்கிய சொந்தத்திலேயே உண்டு

நாமக்கல் சிபி said...

இப்படியும் சில எக்ஸ்கள்!

iniyavan said...

நண்பர்களை மன்னித்துவிடலாம். ஆனால் துரோகிகளை????

பாவம் அவருடைய குடும்பம்.

அப்பாவி முரு said...

ullen aiyya

Chitra said...

பொய் சொல்லி சொல்லி எத்தனை நாள் தான் புளப்பு நடத்த முடியும் என்று இப்போவாவது அவர் புரிந்து கொண்டால் சரி.

coolzkarthi said...

அண்ணே நான் இப்ப தான் ஆபிஸ் பக்கம் போறேன்.....ட்ரைனிங் முடிஞ்சிது....மிஸ்டர் எக்ஸ் உண்டா என்று பார்க்கிறேன்....

துமிழ் said...

விடுங்க பாஸ் ..இதெல்லாம் வாழ்க்கையில சகஜம்

goma said...

யாருமே கெட்டவனாக இருப்பேன் என்று இருப்பதில்லை.அவருக்குச் சொல்லித் திருத்த, நல்ல ஆள்,அல்லது நல்லாள் ,இல்லாதவராக இருக்கலாம்

மணிஜி said...

ராகவன் அண்ணா ! எனக்கும் இந்த மாதிரி நிறைய கேரக்டர்ஸ் பரிச்சயம். நல்லா எழுதியிருக்கீங்க..அப்புறம் வழமை போல் ஆசிர்வாதங்கள் அரவிந்துக்கு...

தமிழ் உதயம் said...

"பொய் சொன்ன வாய்க்கு போஜனம் கூட கிடைக்காது" இது பழமொழி. அது இங்கே நிருபணமாகி விட்டது.

Iyappan Krishnan said...

he gets what he deserves

Paleo God said...

ஹும்ம்.. ஒன்னும் சொல்றதுக்கில்லீங்க, பார்த்து ஒதுங்கி போயிடறது அம்புட்டுத்தான். பரிதாபப்படக்கூட லாயக்கற்றவங்கள எதுல சேர்க்கறது..??

அன்புடன் அருணா said...

நானும் கூடச் சந்தித்திருக்கிறேன் இப்படி!

பனித்துளி சங்கர் said...

இதற்கு விடை தெரியாமல் தான் இவளவு நாளா இருக்கேன் இதுல நீங்கவேர !


மீண்டும் வருவான் பனித்துளி !

பனித்துளி சங்கர் said...

///////////வானம்பாடிகள் said...
அண்ணே! எல்லா ஆஃபீஸிலயும் இப்படி ஒன்னு இருக்குமா? படிச்சதும் இவரை விட மோசமா இன்னோரு கேரக்டர் கண்முன் வருது. பாவம் பார்த்தவனுக்கு பாவத்த சேர்த்து வச்சிடுவாங்க.

இனிமே இப்படி அடிக்கடி ஒரு இடுகை போட்டாவணும். இல்லாட்டி பின்னூட்டம் பெறுவோர் சங்கம் மூலம் பின்னூட்டப் போராட்டம் நடை பெறும்.
//////////


அய்யோ என்னை காப்பாற்ற யாருமே இல்லையா ?????????????????

அய்யோ என்னை காப்பாற்ற யாருமே இல்லையா ?????????????????


மீண்டும் வருவான் RDX !

பனித்துளி சங்கர் said...

இப்பொழுது அலுவலகத்தில் இருப்பதால் ஓட்டுயிட இயலவில்லை . ரூம் சென்று இட்டுவிடுகிறேன் .

மீண்டும் வருவான் பனித்துளி !

பனித்துளி சங்கர் said...

/////////////எனக்கும் தெரிஞ்ச ஒரு கேரக்டர் பற்றி சொல்ல வேண்டியிருக்கு.. பொய்யும், துரோகமும் சேர்ந்து மனிதனை அழித்த விதம்... ////////////


இறுதி வரைக்கும் அது யாருனு சொல்லவே இல்லையே ?????????

மீண்டும் வருவான் பனித்துளி !

அக்கினிச் சித்தன் said...

யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை பிறிதொன்றும் வாய்மையின் நல்ல பிற - அப்படின்னு நம்ம அறநூல் சொல்லியிருக்குங்கோ! பொய் சொல்லக் கூடாதுன்னா, நம்மள்ல பலபேர் அமைதியாத்தானுங்களே இருக்கணும்!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

'தன் வாயே தனக்குக் கெடுதி' என்று
தானே கெடுத்துக் கொண்டார், தன்
வாழ்வை. இப்போ என்ன செய்கிறார்
வயிற்றுப்பிழைப்புக்கு?

http://urupudaathathu.blogspot.com/ said...

thamizmanam

இடுகைத்தலைப்பு:
கேரக்டர் - மிஸ்டர் எக்ஸ்...

உங்கள் ஓட்டு சேர்க்கப்பட்டது.நன்றி!

சன்னலை மூடு

MJV said...

என்னமோ போங்க இராகவன். அந்த குடும்பம் சிதைந்து போய்டுச்சே.... விதம் விதமான கதாபாத்திரங்கள்!

பழமைபேசி said...

வண்ணனிடம் எகுறு ஓட்டு வாங்கி எங்களுள் ஒன்றான அண்ணன் வாழ்க!

இராகவன் நைஜிரியா said...

// வானம்பாடிகள் said...
அண்ணே! எல்லா ஆஃபீஸிலயும் இப்படி ஒன்னு இருக்குமா? படிச்சதும் இவரை விட மோசமா இன்னோரு கேரக்டர் கண்முன் வருது. பாவம் பார்த்தவனுக்கு பாவத்த சேர்த்து வச்சிடுவாங்க.

இனிமே இப்படி அடிக்கடி ஒரு இடுகை போட்டாவணும். இல்லாட்டி பின்னூட்டம் பெறுவோர் சங்கம் மூலம் பின்னூட்டப் போராட்டம் நடை பெறும். //

ஆமாங்க சரியா சொன்னீங்க.

அடிக்கடி இடுகை போடணும் எனக்கும் ஆசை உண்டு. ஆனா அதுக்கெல்லாம் கொஞ்சம் மூளை வேலை செய்யணும் அண்ணே... இருந்தால் தானே வேலை செய்யும்.

//ஆஹா. மீ த ஃப்ரஸ்ட்:)//

ஆமாங்க அண்ணே கரெக்டா சொன்னீங்க..

பழமைபேசி said...

@@அணிமா

யோவ் மலைக்கோட்டை, நாங்களும் கடை நடத்துறம் தெரியும்ல? மலைக்கோட்டையார் ஒழிக!

பழமைபேசி said...

ஆகா, அண்ணன் கடையிலதான் குந்திகினு இருக்காருங்கோய்....அய்ய்....

இராகவன் நைஜிரியா said...

// நட்புடன் ஜமால் said...
என்னத்த சொல்ல

-------------

வானம்பாடிகள் சொன்னது போல அடிக்கடி ஒரு இடுக்கை போடுங்க ஆனா இந்த மாதிரியல்ல

வழமை போல //

அண்ணன் வானம்பாடிகளுக்கு சொன்ன பதில்...

அடிக்கடி இடுகைப் போட எனக்கும் ஆசையாகத்தான் இருக்கு. ஆனா மூளை வேலைச் செய்யலையே..

இராகவன் நைஜிரியா said...

// T.V.ராதாகிருஷ்ணன் said...
//பணத்திற்காக பொய் சொல்லி அதுவே வாழ்க்கையாகி, இப்போ துரோகம் செய்யும் நிலைமைக்கு வந்து, வாழ்வை அஸ்தமிக்க வைத்துவிட்டது.//

Super Lines //

நன்றி டி.வி.ஆர் அண்ணே..

இராகவன் நைஜிரியா said...

// நேசமித்ரன் said...
துரோகத்தின் நகக்கண் இருபதும் நெற்றிக்கண் ஆகும்

நின்று கொண்டிருக்க கடவுளர்கள் ஆயுதங்கள் அதிகம் தாங்கிக் கொண்டிருப்பதால் ஆடமேடெட் மெஸேஜ் போலத்
தீர்ப்புகள் உடனுக்கு உடன்

அடிக்கடி இடுகை போடாட்டி அபூஜாவுக்கு பஜாஜ் ஆட்டோ ஏரியா பாய்ஸ் உடன் அனுப்பப்படும் என்று தெரிவிக்கப் படுகிறது

- நைஜீரியா வலை பதிவர் சங்கத்தின் லாகோஸ் கிளை //

நன்றி நேசா..

நான் என்ன எழுதக் கூடாது என்று நினைக்கின்றேனா... எழுத வரவில்லைங்க...

எப்பவாவது தான் எதாவது எழுதத் தோணுதுங்க...

இராகவன் நைஜிரியா said...

// கலகலப்ரியா said...
இப்டி நிறைய உண்டு...~ சில பேரு... தும்மினா கூட தும்மினேன்னு சொல்ல மாட்டாங்க... ஏன்னு தெரியலை... ராகவன் கிட்ட இப்டி ஒரு காரமான இடுகை... வெரி குட்... வெரி குட்டு... //

நன்றிங்க. துரோகம் செய்தவரை நினைக்க நினைக்க ... என்ன சொல்வது என்றுத் தெரியவில்லை...

இராகவன் நைஜிரியா said...

// பிரியமுடன்...வசந்த் said...
பாவம்தான் அவர் குடும்பம்..

:( //

சரியாகச் சொன்னீர்கள்.. இரண்டு குழந்தைகள்... நினைக்கவே பாவமா இருக்கு..

இராகவன் நைஜிரியா said...

// ஸ்ரீராம். said...
எங்கள் அலுவலகத்தில் கூட இப்படி ஒரு கேரக்டர் உண்டு. ஒரு டீக்காக எதை வேண்டுமானாலும் செய்யும், சொல்லும் கேரக்டர்...ஆனால் வசதிக்கு ஒன்றும் குறைச்சல் இல்லை.. //

ஓவ்வொரு இடத்திலும் ஒரு கேரக்டர் இருக்கும் போலிருக்கு...

இராகவன் நைஜிரியா said...

// ஜெய்லானி said...
சார், இவர் ஏன் இப்படிஆனார் என்ற காரணத்தை சொல்லி இருந்தால் நல்லா இருக்கும். ஏன் என்றால் எந்த கெட்ட பழக்கமும் இல்லாதவர் இப்படி ஆவது விசித்திரம்.. //

அதுதாங்க இன்று வரை எனக்குப் புரியவில்லை...

அவருடன் 15 வருடங்களாக பழகும் நண்பர்களுக்கும் அதற்கான காரணம் தெரியவில்லை..

இராகவன் நைஜிரியா said...

// SUFFIX said...
அவரை நினைத்தால் பாவமாக இருக்கிறது, ஏதோ ஒரு சூழ்நிலை தான் இப்படி அவரை மாற்றியிருக்கவேண்டும்.//

ஒரு நல்ல மன நல மருத்துவரிடம் காண்பிக்க வேண்டும்... அவராவது கண்டுபிடிக்கின்றாரா எனப் பார்க்க வேண்டும்..

டாக்டர் ருத்ரன் அவர்கள் வேண்டுமானால் இதற்கு சரியான தீர்வு சொல்ல இயலும் என நினைக்கின்றேன்.

இராகவன் நைஜிரியா said...

// thenammailakshmanan said...
உண்மை ராகவன் இப்படியும் சிலர் இருக்கத்தான் செய்யிறாங்க என்ன செய்ய இந்த மாதிரி நிலை வந்த பின்பாவது மாறவேண்டும் //

இவர் மாறுவார் என்ற நம்பிக்கை போய்விட்டது தோழி.

இராகவன் நைஜிரியா said...

// சைவகொத்துப்பரோட்டா said...
இந்த குணம் கொண்ட ஆட்கள் நிறைய இருக்கிறார்கள் என நினைக்கிறேன், நானும்
பார்த்திருக்கிறேன் இதே போன்ற நபரை(களை!!).//

பொய் சொல்லி, துரோகம் செய்பவரை என் வாழ்நாளில் நான் பார்க்கும் முதல் நபரும், கடைசி நபருமாக இவரே இருக்கட்டும்.

இராகவன் நைஜிரியா said...

// முகிலன் said...
இந்த குணம் உள்ளவர் என நெருங்கிய சொந்தத்திலேயே உண்டு //

எல்லா இடத்திலேயும் உண்டுங்க... ஆனால் இந்த அளவுக்கு இருப்பாரா எனத் தெரியவில்லை.

இராகவன் நைஜிரியா said...

// நாமக்கல் சிபி said...
இப்படியும் சில எக்ஸ்கள்! //

பேர் போட்டு எழுதணும் என நினைச்சேன் அண்ணே... மனசு கேட்கவில்லை... அதனால் எக்ஸ் எனப் போட்டுவிட்டேன்..

இராகவன் நைஜிரியா said...

// என். உலகநாதன் said...
நண்பர்களை மன்னித்துவிடலாம். ஆனால் துரோகிகளை????

பாவம் அவருடைய குடும்பம். //

சரியாக சொன்னீர்கள் உலகநாதன்... அவர்கள் குடும்பத்தை நினைத்தால் பாவமாகத்தான் இருக்கின்றது.

இராகவன் நைஜிரியா said...

// அப்பாவி முரு said...
ullen aiyya //

ப்ரசண்ட் போட்டாச்சுங்க..

இராகவன் நைஜிரியா said...

// Chitra said...
பொய் சொல்லி சொல்லி எத்தனை நாள் தான் புளப்பு நடத்த முடியும் என்று இப்போவாவது அவர் புரிந்து கொண்டால் சரி //

இன்று வரை புரிந்து கொண்ட மாதிரி தெரியவில்லைங்க..

இராகவன் நைஜிரியா said...

// coolzkarthi said...
அண்ணே நான் இப்ப தான் ஆபிஸ் பக்கம் போறேன்.....ட்ரைனிங் முடிஞ்சிது....மிஸ்டர் எக்ஸ் உண்டா என்று பார்க்கிறேன்.... //

இது மாதிரி நிறைய எக்ஸ் உண்டுங்க... சூதனமா இருந்துகுங்க..

இராகவன் நைஜிரியா said...

// goma said...
யாருமே கெட்டவனாக இருப்பேன் என்று இருப்பதில்லை.அவருக்குச் சொல்லித் திருத்த, நல்ல ஆள்,அல்லது நல்லாள் ,இல்லாதவராக இருக்கலாம் //

நிறைய முயற்சி செய்து பார்த்தாச்சுங்க..

இங்கு சொன்னது... 20% தாங்க.

இராகவன் நைஜிரியா said...

// மணிஜீ...... said...
ராகவன் அண்ணா ! எனக்கும் இந்த மாதிரி நிறைய கேரக்டர்ஸ் பரிச்சயம். நல்லா எழுதியிருக்கீங்க..அப்புறம் வழமை போல் ஆசிர்வாதங்கள் அரவிந்துக்கு... //

நன்றி மணி அண்ணே...

அரவிந்திடம் உங்க ஆசிர்வாதங்களை தெரிவித்து விடுகின்றேன்.

இராகவன் நைஜிரியா said...

// தமிழ் உதயம் said...
"பொய் சொன்ன வாய்க்கு போஜனம் கூட கிடைக்காது" இது பழமொழி. அது இங்கே நிருபணமாகி விட்டது. //

சரியாகச் சொன்னீர்கள் தமிழ்..

இராகவன் நைஜிரியா said...

// Jeeves said...
he gets what he deserves //

May be true...

இராகவன் நைஜிரியா said...

// 【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...
ஹும்ம்.. ஒன்னும் சொல்றதுக்கில்லீங்க, பார்த்து ஒதுங்கி போயிடறது அம்புட்டுத்தான். பரிதாபப்படக்கூட லாயக்கற்றவங்கள எதுல சேர்க்கறது..??//

என்ன செய்வதுங்க... ஒன்னும் செய்ய முடியாதுங்க..

இராகவன் நைஜிரியா said...

// அன்புடன் அருணா said...
நானும் கூடச் சந்தித்திருக்கிறேன் இப்படி!//

நன்றி அருணா..

இராகவன் நைஜிரியா said...

// ♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...
இதற்கு விடை தெரியாமல் தான் இவளவு நாளா இருக்கேன் இதுல நீங்கவேர !


மீண்டும் வருவான் பனித்துளி ! //

ஆஹா... நீங்களுமா?


///////////வானம்பாடிகள் said...
அண்ணே! எல்லா ஆஃபீஸிலயும் இப்படி ஒன்னு இருக்குமா? படிச்சதும் இவரை விட மோசமா இன்னோரு கேரக்டர் கண்முன் வருது. பாவம் பார்த்தவனுக்கு பாவத்த சேர்த்து வச்சிடுவாங்க.

இனிமே இப்படி அடிக்கடி ஒரு இடுகை போட்டாவணும். இல்லாட்டி பின்னூட்டம் பெறுவோர் சங்கம் மூலம் பின்னூட்டப் போராட்டம் நடை பெறும்.
//////////


அய்யோ என்னை காப்பாற்ற யாருமே இல்லையா ?????????????????

அய்யோ என்னை காப்பாற்ற யாருமே இல்லையா ?????????????????


மீண்டும் வருவான் RDX ! //

RDX ஐ காப்பாற்ற யாருமே இல்லையா...அவ்....அவ்...அவ்..


//இப்பொழுது அலுவலகத்தில் இருப்பதால் ஓட்டுயிட இயலவில்லை . ரூம் சென்று இட்டுவிடுகிறேன் .

மீண்டும் வருவான் பனித்துளி ! //

நன்றி.

/////////////எனக்கும் தெரிஞ்ச ஒரு கேரக்டர் பற்றி சொல்ல வேண்டியிருக்கு.. பொய்யும், துரோகமும் சேர்ந்து மனிதனை அழித்த விதம்... ////////////


இறுதி வரைக்கும் அது யாருனு சொல்லவே இல்லையே ?????????

மீண்டும் வருவான் பனித்துளி ! //

சொல்ல வேண்டாம் என்றுதான் சொல்லவில்லைங்க..

இராகவன் நைஜிரியா said...

// அக்கினிச் சித்தன் said...
யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை பிறிதொன்றும் வாய்மையின் நல்ல பிற - அப்படின்னு நம்ம அறநூல் சொல்லியிருக்குங்கோ! பொய் சொல்லக் கூடாதுன்னா, நம்மள்ல பலபேர் அமைதியாத்தானுங்களே இருக்கணும்!//

எப்பவாவது பொய் சொல்வதற்கும், எப்போதுமே சொல்வதற்கும் வித்யாசம் இருக்கில்ல..

இராகவன் நைஜிரியா said...

// NIZAMUDEEN said...
'தன் வாயே தனக்குக் கெடுதி' என்று
தானே கெடுத்துக் கொண்டார், தன்
வாழ்வை. இப்போ என்ன செய்கிறார்
வயிற்றுப்பிழைப்புக்கு? //

தெரியலைங்க...

எப்படியாவது வயிற்றுப் பிழப்பை பார்த்துகிடுவாருங்க..

இராகவன் நைஜிரியா said...

// அணிமா said...
thamizmanam

இடுகைத்தலைப்பு:
கேரக்டர் - மிஸ்டர் எக்ஸ்...

உங்கள் ஓட்டு சேர்க்கப்பட்டது.நன்றி!

சன்னலை மூடு //

நன்றி அன்புத் தம்பி யோக்பால்..

இராகவன் நைஜிரியா said...

// காவிரிக்கரையோன் MJV said...
என்னமோ போங்க இராகவன். அந்த குடும்பம் சிதைந்து போய்டுச்சே.... விதம் விதமான கதாபாத்திரங்கள்! //

ஆமாம்.. காவிரிக்கரையோன்..

Romeoboy said...

அண்ணே இதே மாதிரி நிறைய கேசுகள நான் பார்த்து இருக்குறேன். என்னோட சொந்தகாரர் ஒருத்தர் இப்படி தான் இருக்கார். :(

இராகவன் நைஜிரியா said...

// பழமைபேசி said...
வண்ணனிடம் எகுறு ஓட்டு வாங்கி எங்களுள் ஒன்றான அண்ணன் வாழ்க!//

ஆமாங்க ஐயா நானும் பிரபலமாயிட்டு வருகின்றேன்..

##@@அணிமா

யோவ் மலைக்கோட்டை, நாங்களும் கடை நடத்துறம் தெரியும்ல? மலைக்கோட்டையார் ஒழிக! //

லூஸ்ல விடுங்க அண்ணே... அன்புத் தம்பி..

## ஆகா, அண்ணன் கடையிலதான் குந்திகினு இருக்காருங்கோய்....அய்ய்.... ##

ஆமாங்க அண்ணே இங்க தான் இருக்கேன்

இராகவன் நைஜிரியா said...

// ~~Romeo~~ said...
அண்ணே இதே மாதிரி நிறைய கேசுகள நான் பார்த்து இருக்குறேன். என்னோட சொந்தகாரர் ஒருத்தர் இப்படி தான் இருக்கார். :( //

ஒன்னுமே செய்ய முடியலைங்க.. கோபம் மட்டும் வருது... அது இடுகையா வந்திடுச்சு..

பா.ராஜாராம் said...

கஷ்ட்டமாத்தான் இருக்கு...

நல்லா எழுதி இருக்கீங்க அண்ணாச்சி.

*இயற்கை ராஜி* said...

ம்ம்ம்... நல்ல பகிர்வு.. இப்படியும் சில மனிதர்கள்:-(

Mahesh said...

வருத்தமா இருக்கு....

சிநேகிதன் அக்பர் said...

இந்த மாதிரி அனுபவம் எனக்கும் உண்டுண்ணே. ஒரு வேலை அது ஒருவித சைக்கோதனமா இருக்குமோன்னு தெரியலை டாக்டர்ட்டதான் கேக்கணும்.

நினைச்சாலே அலர்ஜியா இருக்கு.

//இனிமே இப்படி அடிக்கடி ஒரு இடுகை போட்டாவணும். இல்லாட்டி பின்னூட்டம் பெறுவோர் சங்கம் மூலம் பின்னூட்டப் போராட்டம் நடை பெறும்.//

வழிமொழிகிறேன்.

ஹுஸைனம்மா said...

அவரும் இதப் படிக்கிறார்னா, எல்லாரும் எழுதினதப் பாத்தாவது ஒரு குற்ற உணர்ச்சி வரணும்.

கார்த்திகைப் பாண்டியன் said...

எல்லாம் கலந்ததுதாண்ணே வாழ்க்கை.. இப்படியும் சில மனிதர்கள்..:-(((

கார்த்திகைப் பாண்டியன் said...

அப்புறம்.. சைடுல போட்டு இருக்குற அரவிந்தோட படம் சூப்பர் அண்ணே..:-)))

அப்துல்மாலிக் said...

நல்ல பகிர்தல் அண்ணே

அன்புடன் மலிக்கா said...

பொய் பேசுபவனுக்கு அதுவே தண்டனையாக மாறும்.
ரொம்ப நாள் நீடிக்காது பொய்.

பாவம் அவரும் அவர்குடும்பமும்.

Kiruthigan said...

இது மாதிரி ஆளுங்க சிலர நானும் பாத்திருக்கேன்...

உண்மைத்தமிழன் said...

இவர் போன்றவர்களை நானும் நிறைய இடங்களில் சந்தித்திருக்கிறேன். முதலில் அவர்கள் வாழ்வதைப் போலத்தான் நமக்குத் தெரியும். ஆனால் உண்மை அதுவல்ல..! வீழ்வதற்கு இத்தனை நாட்கள் தன்னை தயார் செய்து கொண்டிருந்தார் என்பதுதான் உண்மை..

வரதராஜலு .பூ said...
This comment has been removed by the author.
வரதராஜலு .பூ said...

//ஒரு நண்பரிடம் அந்த நிறுவனத்தைப் பற்றி பேசி கொண்டு இருக்கும் போது, முதலாளி ரொம்ப நல்லவர், கம்பெனியில் திருடியவனைக் கூட மன்னிச்சு விட்டுவிடுவார்... ஆனால் துரோகத்தை அவரால் மன்னிக்க முடியவில்லை என்றார்.//

இப்படிப்பட்டவருக்கு எப்படிதான் துரோகம் செய்ய மனசு வந்ததோ மிஸ்டர். எக்சுக்கு

//பணத்திற்காக பொய் சொல்லி அதுவே வாழ்க்கையாகி, இப்போ துரோகம் செய்யும் நிலைமைக்கு வந்து, வாழ்வை அஸ்தமிக்க வைத்துவிட்டது.//

பெருமைக்கும் ஏனை சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக்கல் - இதற்கு இவர் ஒரு உதாரணம்.

ராமலக்ஷ்மி said...

இது போன்றவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். எத்தனை பட்டாலும் எவர் சொன்னாலும் திருந்தவும் மாட்டார்கள். கடைசியில் பரிதவித்து நிற்பது குடும்பமே:(!

Kavi said...

http://iravuvaanam.blogspot.com/2011/01/blog-post_27.html?showComment=1296207640259#c926721293703179781