அன்புத் தோழி தேனம்மை லஷ்மணன் அவர்களின் அழைப்பிக்கிணங்க இந்த சங்கிலி தொடர் இடுகை...
பொறுப்பி : நமக்கு இடுகை போடுவதற்கான புத்திசாலித்தனம் இல்லை... இதுதாண்டா சரியான நேரம்... சீனாரானா ... (எத்தனை நாள்தான் சூனாபானான்னு மத்தவங்க பேரைச் சொல்லிகிட்டு இருப்பது... நம்ம பேரை நாமளே சொல்லவில்லை என்றால் எப்படி...) அப்படின்னு சொல்லிகிட்டு, இந்த தொடர் சங்கிலி இடுகையைத் தொடருகின்றேன்...
நிபந்தனைகள் :
- உங்களின் சொந்தகாரர்களாக இருக்க கூடாது.. (இருந்தா மட்டும் தெரியவா போகுது...)
- வரிசை முக்கியம் இல்லை... (என்னிக்கு வரிசையில நின்னுயிருக்கோம் இங்க கொடுப்பதற்கு..)
- இந்த தொடர் இடுகையில் வெவ்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களாக இருப்பது நலம். (இதுவும் ஒருவிதத்தில் நல்லதாப் போச்சு... இல்லாட்டி ஒரே துறையில் பத்து பேர் சொல்லுன்னா நாம... மூளையை... அதுகூட இல்ல... எத கசக்கறதுன்னு தெரியாம முழிச்சுகிட்டு இருக்கணும்...)
1. மதர் தெரசா (1910 - 1997)
ஏழையின் சிரிப்பில் இறைவனை கண்டவர். மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என தொண்டு புரிந்தவர். தன்னலமில்லாமல் ஜாதி, மதம் கடந்து உதவ வேண்டும் என கொள்கையை மறக்க முடியுமா.
2. எம். எஸ். சுப்புலக்ஷ்மி (1916 - 2004)
தேனினும் இனிய காந்தக் குரல், முகத்தில் ஒரு சாந்தம். கர்னாட சங்கீதத்தை எங்கும் பரவச் செய்ததில் இவரின் பங்கு மறக்க முடியாது.
இவரின் திரைப் படப் பாட்டுகளுக்கு நான் அடிமை. சிங்கார வேலனே தேவா ஆகட்டும், உயிரே படப்பாட்டு ஆகட்டும் இன்று முழுவதும் கேட்டுக் கொண்டே இருக்கலாம். இவரின் எளிமை ரொம்ப பிடிக்கும். தமிழில் அதிகமான கதாநாயகிகளுக்கு முதல் பாட்டு பாடியவர் இவர்தான். (ராதா, ரோஜா, மீனா, சங்கவி, விந்தியா, ரஞ்சிதா, ரேகா, பானுப்ரியா, ராதிகா, ரேவதி, சுஜாதா, ப்ரீதி ஜிந்தா)
4. அன்னி பெசண்ட் அம்மையார். (1847 - 1933)
இந்திய விடுதலைக்காக போராடிய பெண் புலி. இங்கிலாந்தை தாயகமாகக் கொண்டு இருந்தாலும், பெண்கள் விடுதலைக்காகவும், அவர்களுக்கு எதிராக நடக்கும் வன் கொடுமைகளுக்காகவும் பாடுபட்டவர்.
5. இந்திரா காந்தி. (1917 - 1984)
இந்தியாவின் இரும்புப் பெண்மணி. இன்று இருக்கும் பல பெண் அரசியல்வாதிகளுக்கு மானசீக குரு அன்னை இந்திரா காந்தி என்றால் அது மிகை ஆகாது.
6. மார்க்ரெட் தாட்சர் (1925)
இங்கிலாந்தின் முதல் பெண் பிரதமர் (1979 - 1990). இங்கிலாந்தின் இரும்பு பெண்மணி என்று இவரைச் சொல்லலாம்.
7. மேதா பாட்கர். (1954)
லட்சக்கணக்கான ஏழை எளிய மக்கள் அறிந்த சோஷியலிஸ்ட், மக்கள் முன்னேற்றத்திற்காக பாடுபடும் ஒரு மிக நல்ல பெண்மணி.
என்னை மிகவும் கவர்ந்த ஒரு நடிகை. (நடிக்க தெரிந்தவர்.) இன்னமும் என்னிடம் யார் சிவாஜிக்கு சரியான ஜோடி என்றுக் கேட்டால் உடனே தயங்காமல் பதில் சொல்லுவேன் பத்மினி என்று.. (வியட்னாம் வீடு, தில்லானா மோகனாம்பாள் இரண்டு போதுமே உதாரணத்துக்கு..)
9. P.T. உஷா. (1964)
தங்கத் தாரகை - உலக விளையாட்டு அரங்கில் இந்தியாவின் பெயரை நிலை நாட்டியவர்களில் முக்கியமானவர்.
10.சகுந்தலா தேவி (1939)
பிறவி கணித மேதை. இவரின் கணித திறமைக்காக “மனித கணினி” என்று அழைக்கப்பட்டவர். இவரின் திறமைக்கு ஒரு எடுத்துக்காட்டு.. 1977 -ல் 201 டிஜிட் நம்பருக்கு ஸ்கொயர் ரூட் மனக் கணக்காக போட்டுக் காண்பித்தவர்.
இந்த சங்கிலித் தொடர் இடுகையை தொடர நான் அழைப்பது..
மூன்று பேர் போதும் என்ற நல்ல எண்ணம் தான் காரணம்.
95 comments:
பகிர்வுக்கு நன்றி! 40+ விழ வாழ்த்துகள்!! இஃகிஃகி!!!
//சங்கிலித் தொடர் இடுகையை //
இது...இது!!
அண்ணாச்சி சகுந்தலா தேவி அறிமுகம் டாப்பு...
ஹிஹிஹி சித்தப்பூ பத்மினி பிடிக்குமா? ஓக்கே. உங்க காலத்தில் அவங்க தான் பெரிய ஹீரோயின் .. ஸ்ஸ்ஸ்ப்பாபா ஒரிஜினல் வயசு கண்டுபிடிச்சாச்சு :))
தெளிவான, நறுக்கான விளக்கங்களுடன், ஆண்டும் குறிப்பிட்டு
சிறப்பாய் இருக்கிறது.
அண்ணே பத்து தேர்வும் அருமைண்ணே...
ஆனா பத்மினின்னு சொல்லி வயச காட்டி கொடுத்திட்டீங்களே...
அசத்தல்ண்ணே.. ::))
அருமையான பெண்களை தேர்வு செய்திருக்கிறீர்கள் ராகவன் அண்ணே!!
நிறைய தகவல்கள் அறிந்து கொண்டேன். நன்றி
அருமையான பெண்மணிகள் நீங்கள் குறிப்பிட்டவர்கள்..
ராகவன் எடுத்த காரியத்தை நச்சுன்னு முடிச்சுட்டீங்க
ஆனா இப்படி எல்லோரும் கொஞ்சம் பழைய ஆளாவே இருக்காங்களே புதுசா யாரும் உங்க மனசைக் கவரலையா
/////ஆனா இப்படி எல்லோரும் கொஞ்சம் பழைய ஆளாவே இருக்காங்களே புதுசா யாரும் உங்க மனசைக் கவரலையா/////
.....அதானே!
அட அட... அசத்திப்புட்டீங்க...
இது அநியாயம் ! சின்னப் பையன் என்னை மாட்டி விட்டுட்டீங்களே அண்ணே...
நடக்கட்டும் நடக்கட்டும் லாகோஸ் பக்கம் வராமலா போய்டுவீங்க ?!
:)
// பழமைபேசி said...
பகிர்வுக்கு நன்றி! 40+ விழ வாழ்த்துகள்!! இஃகிஃகி!!!//
அண்ணே தங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி.
##//சங்கிலித் தொடர் இடுகையை //
இது...இது!!##
நீங்க சொல்லிக் கொடுத்தது மறக்குமா அண்ணே.
March 29, 20
// நாஞ்சில் பிரதாப் said...
அண்ணாச்சி சகுந்தலா தேவி அறிமுகம் டாப்பு...//
நன்றி நாஞ்சிலாரே...
கவிதையில கலக்கறீங்க...
// மயில் said...
ஹிஹிஹி சித்தப்பூ பத்மினி பிடிக்குமா? ஓக்கே. உங்க காலத்தில் அவங்க தான் பெரிய ஹீரோயின் .. ஸ்ஸ்ஸ்ப்பாபா ஒரிஜினல் வயசு கண்டுபிடிச்சாச்சு :))//
யக்கோவ்... உங்களுக்கு நான் சித்தப்பூ... எனக்கு நீங்க அக்கா...
// NIZAMUDEEN said...
தெளிவான, நறுக்கான விளக்கங்களுடன், ஆண்டும் குறிப்பிட்டு
சிறப்பாய் இருக்கிறது. //
நன்றி நிஜாம்.
// கண்ணா.. said...
அண்ணே பத்து தேர்வும் அருமைண்ணே...
ஆனா பத்மினின்னு சொல்லி வயச காட்டி கொடுத்திட்டீங்களே... //
வாங்க கண்ணா வாங்க..
அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா..
// 【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...
அசத்தல்ண்ணே.. ::)) ..
நன்றி ஷங்கர்.
// Starjan ( ஸ்டார்ஜன் ) said...
அருமையான பெண்களை தேர்வு செய்திருக்கிறீர்கள் ராகவன் அண்ணே!!
நிறைய தகவல்கள் அறிந்து கொண்டேன். நன்றி //
நன்றி ஸ்டார்.
// மின்மினி said...
அருமையான பெண்மணிகள் நீங்கள் குறிப்பிட்டவர்கள்.. //
நன்றி மின்மினி...
// thenammailakshmanan said...
ராகவன் எடுத்த காரியத்தை நச்சுன்னு முடிச்சுட்டீங்க
ஆனா இப்படி எல்லோரும் கொஞ்சம் பழைய ஆளாவே இருக்காங்களே புதுசா யாரும் உங்க மனசைக் கவரலையா //
நன்றி தோழி. புதுசா யாரும் கவரவில்லை என்றுச் சொல்லமுடியாது. கவர்ந்தவர்களில் - இவர்கள் மிகவும் கவர்ந்தவர்கள்... அதுதான். இந்த 10 பேரில் 5 பேர் எடுகச் சொன்னால்... மதர் தெரிசா, எம்.எஸ்.எஸ், அன்னை இந்திராகாந்தி, பத்மினி, மேதா பாட்கர் என்றுச் சொல்லுவேன்.
// Chitra said...
/////ஆனா இப்படி எல்லோரும் கொஞ்சம் பழைய ஆளாவே இருக்காங்களே புதுசா யாரும் உங்க மனசைக் கவரலையா/////
.....அதானே!//
நன்றி சித்ரா. அது அப்படிதாங்க... மிகவும் கவர்ந்தவர்கள் இவர்கள்...
// கலகலப்ரியா said...
அட அட... அசத்திப்புட்டீங்க... //
நன்றிங்க
// நேசமித்ரன் said...
இது அநியாயம் ! சின்னப் பையன் என்னை மாட்டி விட்டுட்டீங்களே அண்ணே...
நடக்கட்டும் நடக்கட்டும் லாகோஸ் பக்கம் வராமலா போய்டுவீங்க ?!
:)//
சின்னப் பையனா இருந்தா என்ன... பிடிக்க கூடாது என்று சட்டம் இருக்குதா என்ன...
ஹை நாங்க லாகோஸ் இந்த வருஷம் வரவில்லையே... அபுஜாவில் இருந்து நேரடியா பறக்கப் போறோமில்ல.
அருமையான தொகுப்பு.
super selection.
:-):-)
அரவிந்த் ஃபோட்டோ அழகா இருக்கு.
அண்ணே சிரிச்சி சிரிச்சு வந்தா சீனா ரானாடோய்ன்னு ஒரு போஸ்ட் போடுங்ண்ணே....
:))
சீனாரானா நெம்ப ஓல்டுபோல ஆவ்வ்வ்வ்வ்வ்
அண்ணாவ தாத்தான்னு மாத்திடலாமான்னு யோசிக்கிறேன்.....
:))))))
இராகவா... அண்னே
கலக்கிட்டிங்க.. போங்க
RIYAS
நல்ல செலக்ஸன். இந்த புகழ் பெற்ற பெண்மணிகளை எனக்கும் பிடிக்கும்.
பி.டி.உஷா:)). சாரி.
பத்து தேர்வும் முத்துக்கள்,எளிய அறிமுகத்துடன்.
''நீங்க நீங்கதான்...அண்ணே''
//ஜானகி...தமிழில் அதிகமான கதாநாயகிகளுக்கு முதல் பாட்டு பாடியவர் இவர்தான்//
ஓ..அப்படியா!
அண்ணே,பத்து பெண்கள்ள அண்ணி பேர போடுவிங்கன்னு பார்த்தேன்.
(மாட்டிவிட்டோம்ல...)
சங்கம் தன் கடமையை செய்யும்....
அண்ணிகிட்ட காமிச்சு ஒப்புதல் வாங்கிட்டுதானே...
குறையொன்றுமில்லை மறைமூர்த்தி அண்ணா.
இந்தப் பதிவுல நீங்க சொல்லியிருக்கிறவங்கள்ல மதர் தெரசாவையும், சகுந்தலா தேவியையும் (இன்ஃபோசிஸ் இண்டர்வியூவுக்காக படிச்சது) தவிர வேற யாரையும் எனக்குத் தெரியிற அளவுக்கு நான் வயசானவன் இல்லைங்க மாமா
சூப்பரண்ணே
நீங்கள் சொல்லியிருக்கும் அனைத்து மாந்தரும் என்னை மிகவும் கவர்ந்தவர்கள்.
அருமை...
தொடரை தொடர்ந்திடுவோம்.
கணித மேதை சகுந்தலா தேவியை - கால ஓட்டத்தில் மறந்தே விட்டோம். ஞாபகப்படுத்தியதற்கு நன்றி.
அருமையான இடுகை,பகிர்வுக்கு நன்றி
அண்ணே இது அபிஸியலா ஓக்கே
இன்னபிசியல் லிஸ்ட் எங்கே?:)
வீட்டில் அண்ணி பதிவை படிக்கிறாங்களோ? எல்லாம் அபவ் 60 லேடி பேராவே சொல்லியிருக்கீங்க:))
நீங்க ரொம்ப உசாரு:))
யோவ் குசும்பா அவரோட அனபீசியலை வாங்கி நீர் என்ன பண்ணப்போறீர்??
//புதுசா யாரும் கவரவில்லை என்றுச் சொல்லமுடியாது. கவர்ந்தவர்களில்//
அப்படி கவரோ கவருன்னு கவர்ந்தவங்க பேரை இங்கே சொல்ல முடியாது! அப்படிதானே அண்ணாச்சி:))
ராகவண்ணா, உங்களுக்கு ஏன் கொல்லங்குடி கருப்பாயியை பிடிக்கலைன்னு நான் தெரிஞ்சுக்கலாமா??
// நாஞ்சில் பிரதாப் said...
அண்ணாச்சி சகுந்தலா தேவி அறிமுகம் டாப்பு...
//
என்னது சகுந்தலா தேவியை அண்ணன் இராகவன் தான் அறிமுகம் செஞ்சு வெச்சாரா? அவ்வ்வ்வ்வ்
//எம்.எம்.அப்துல்லா said...
யோவ் குசும்பா அவரோட அனபீசியலை வாங்கி நீர் என்ன பண்ணப்போறீர்??
//
ஒரு ஆர்வம் தான், பெருசு டேஸ்ட் எப்படி இருக்குன்னு தெரிஞ்சுக்க:)))
கவர்ந்தவங்க இருக்கட்டு, அப்படியே நீங்க கவர் குடுத்தவங்களையும் சொன்னீங்கன்னா இன்னும் கொஞ்சம் பெட்டரா இருக்கும்.
// நேசமித்ரன் said...
இது அநியாயம் ! சின்னப் பையன் என்னை மாட்டி விட்டுட்டீங்களே அண்ணே...
//
இங்க பாரு குசும்பா!!! நேசமித்திரன் அண்ணே சின்னப்பையனாம்?!??!
இஃகிஃக்ஃஇஃகி
//எம்.எம்.அப்துல்லா said...
கவர்ந்தவங்க இருக்கட்டு, அப்படியே நீங்க கவர் குடுத்தவங்களையும் சொன்னீங்கன்னா இன்னும் கொஞ்சம் பெட்டரா இருக்கும்.
//
உமக்கு பெட்டராக இருக்கும், அப்புறம் அவர் வீட்டுக்கு போனா ரொம்ப டெர்ரர்ரா இருக்கும்:))
// மயில் said...
ஹிஹிஹி சித்தப்பூ பத்மினி பிடிக்குமா? ஓக்கே. உங்க காலத்தில் அவங்க தான் பெரிய ஹீரோயின் .. ஸ்ஸ்ஸ்ப்பாபா ஒரிஜினல் வயசு கண்டுபிடிச்சாச்சு :))
//
யக்கா, அவர் காலத்து ஹீரோயின் ம்ம்ம்ம் தியாகராஜபாகவதரோட நடிக்குமே...அந்தம்மா பேருகூட..ம்ம்... அது என்னவோ...அதுதான் இவர் காலத்து ஜீரோயின்.
ஒ.கே நான் அப்புறம் ரிலாக்ஸ்டா வர்றேன்.
ரைட்டு அப்துல்லா அண்ணே நீங்க சொன்ன மாதிரி கும்மியாச்சு, அப்பாலிக்கா வருகிறேன்.
நல்ல ஒரு ரசனை. ஒவ்வொருக்கும் கொடுத்த குறிப்புகள் அருமை. வாழ்த்துக்கள்.
வெங்கட் நாகராஜ்
புது தில்லி.
ஜானகி அவர்களின் பாடல் எனக்கும் பிடிக்கும்,
தெவிட்டாத தேன் குரல்.
தேர்வு கலக்கல் அண்ணே.
//ஆனா பத்மினின்னு சொல்லி வயச காட்டி கொடுத்திட்டீங்களே...//
போட்டோவே போட்டாச்சு அப்புறம் என்ன?
பழமைபேசிக்கு குறும்பு ஜாஸ்தி (சாரி) அதிகம். :)
வலைச்சரத்தில் தொடர்ந்து ஆதரவு கொடுக்கிறதுக்கு நன்றி அண்ணே.
அருமை
நல்ல பகிர்வு அண்ணே
ஹிஹிஹி...அட அட... அசத்திப்புட்டீங்க...
ரொம்ப வேகமான பதிவுக்கு இவ்வளவு லேட்டா பின்னூட்ட வந்ததுக்கு ஸாரி!!
அநேகமா எல்லாருமே மறந்துபோன சகுந்தலா தேவியை ஞாபகப் படுத்தினதுக்கு நன்றிண்ணே.
உங்கள் தேர்வுகள் பல என்னுடன் ஒத்து போகிறது நண்பா..
சகுந்தலாதேவியை நினைவுபடுத்தியதற்கு நன்றி சகோ!!
அழகான பத்து பூக்களாலான பூங்கொத்து !!
பகிர்வுக்கு நன்றி!!!
Good selection, I like many in your list.
Good post.
எனக்கும் ஜானகி ரொம்ப பிடிக்கும். பாடும் போது முகத்தில் எந்த மாற்றமும் இருக்காது. இப்பல்லாம் புதுசா பாட வரவங்க பாடும்போது அவங்க முகம் அஷ்டகோணலா போறத பாக்க பயமாயிருக்கு.
ithil sila pengalai ippothaan yenakkuth theriyum...
nallayirunthathu:)
நல்ல தேர்வு! வாழ்த்துக்கள்!
உங்களுடைய எனக்கு பிடித்த பத்து பெண்கள் தொடர்....அருமை..
இதில் அன்னை தெரேசா, எம்.எஸ். சுப்புலட்சுமி, எஸ். ஜானகி, பத்மினி, பி.டி. உஷா, இந்திரா காந்தி இவர்கள் எல்லாம் என்னையும் மிகவும் கவர்ந்தவர்கள்..
உங்களின் மீதி அறிமுகங்களும் அருமை.
ஒரு ஒருவருக்கும் நீங்கள் குறிப்பிட்ட எளிமையான வரிகள்..இன்னமும் அழகு..கூடுகின்றது.
வாழ்த்துக்கள்..
// என்னத்த சொல்ல.. எதோ ப்ளாக் படிச்சமா பின்னூட்டம் போட்டமான்னு இல்லாம இதையும் ஆரம்பிச்சுட்டேன் //
இது ரொம்ப ரொம்ப சூப்பருங்க.. இன்னமும் சிரிச்சிட்டே இருக்க வச்சிட்டீங்க.. நன்றி.. :D :D
அண்ணே நீங்க ரொம்ப நல்லவரு :)
அண்ணே! 1லிருந்து 5, அப்பறம் 9 . அனைத்தும் நம்ம சாய்ஸ் தான். மற்றவர்கள் பத்மினி தவிர அவ்வளவு அறிமுகம் இல்லை. லேட்டா வந்ததுக்கு மன்னிக்கவும்.
நல்ல தேர்வு!
சீனாரானா
படு சூப்பரான பதிவுண்ணா...
கலக்கிட்டேள் போங்கோ...
மதர் தெரசா எல்லாரோட பதிவுலேயும் இருக்கா போல இருக்கே..
சரி... டைம் கெடக்கறச்சே இங்கேயும் வாங்கோ... வந்து பாருங்கோ..
வெற்றியின் விழுதுகள் – (பகுதி-7) http://edakumadaku.blogspot.com/2010/04/7.html
”எந்திரன்” - ஒரு எலெக்ட்ரிக் சந்திப்பு http://jokkiri.blogspot.com/2010/03/blog-post_31.html
உயர்ந்த தேர்வுகள். பாராட்டுகள் ராகவன்.
நல்லா எழுதிருக்கீங்க :-)
வணக்கம் ராகவன் அண்ணா! நல்ல தேர்வு ..... ! அருமை!!!
//ஆனா இப்படி எல்லோரும் கொஞ்சம் பழைய ஆளாவே இருக்காங்களே புதுசா யாரும் உங்க மனசைக் கவரலையா//
தேனம்மை, சித்ரா...
பெருச பார்த்து கேட்கிற கேள்வியா இது...
நல்ல தேர்வு என்றே நினைக்கிறேன்..
நன்றி..
வாழ்க வாழ்க
அண்ணே நெம்ப லேட்டா வந்தாலும்
அடிச்சி ஆடியிருக்கீங்க ...
முதல் எனக்கு ரொம்ப பிடிக்கும் ...
தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
அன்புடன்
www.bogy.in
பத்து பெண்கள் தேர்வும் அசத்தல்
அருமை. எமர்கென்சி கொண்டு வந்ததால் இந்திரா பிடிக்காது; மற்ற தேர்வுகளுடன் உடன் படுகிறேன்
நல்ல தெரிவுகள்
மேதா பாட்கரின் போராட்டக் குணம், எளிமை, இரண்டும் எனக்கு பிடித்தவை. மற்றபடி எல்லோரையும் எனக்கும் பிடிக்கும்.
நன்பரே...
THANKS FOR VISIT MY PAGE AND YOUR SWEET COMMENTS.
மனோ
பதிவும் பகிர்வும் மிக நேர்த்தி...பாராட்டுக்கள்
உங்களுக்கு மேதின வாழ்த்துக்கள்
தரமான படைப்பு..
ஆளாளுக்கு நமீதா போட்டோவ போட்டே ஓட்டு வாங்கறாங்க..
உங்க பதிவுக்கு நெறைய்ய ஓட்டு கிடைக்க வாழ்த்துகள் சார்..
நல்ல தேர்வுகள்.
எம்.எஸ். அவர்களின் இசையை ஆயுள் பூராவும் கேட்டுக்கொண்டே இருக்கலாம்.
என்னமோ போங்க...
பத்மினின்னு சொல்லி பசுமை நிறைந்த நினைகளேன்னு பாடிட்டு இருக்கீங்க
இரும்படுக்கிற இடத்துல 'ஈ'க்கு என்ன வேலை?! நான் சின்னப்பையன்பா
முதன் முறையாக வருகிறேன்..
உங்கள் பதிவுகள் அருமையாக உள்ளன.
நீங்க குறிப்பிட்ட பட்டியல் மிக நல்லதொரு தேர்வு
வாழ்த்துக்கள்
நீங்கள் என் வலை தளத்தை படிக்கிறீர்கள் என்பதே எனக்கு பெருமையாக உள்ளது நண்பரே...
தங்கள் ஊக்கத்திற்கு நன்றி நண்பரே ..........
Post a Comment