ரொம்ப நாளாச்சு. .. அபுஜாவில் பதிவர் சந்திப்பை நடத்தி...
ஒரு பிரம்மாண்டமான பதிவர் சந்திப்பை நடத்தி விட மனது துடித்தது. உடனே தம்பி அணிமா (இன்னமும் பதிவர்தான்.. !!), நேசமித்ரன் இருவரையும் கூப்பிட்டுச் சொன்னபோது, தம்பி நேசன் கவிதை நடையில் பதில் தெரிவித்தார். அந்த கவிதை
ஆயிரம் கதவுகளுக்கு அப்பால்
ஆதவன் ஓளியும் விழியும் சமோவா (இராகவன்)
ரோங்கா (அணிமா) தீவுகளுக்கிடையே
கடக்கும் தேதிக் கோடு என்னைக் கழித்துச்சென்றது
ஆதலால் அண்ணே ஆகாதென்றான் நேசமித்ரன்.
பொருள் : அண்ணே வேலை ரொம்ப அதிகம். அதனால் என்னால் பதிவர் சந்திப்பில் கலந்துக் கொள்ள இயலாத நிலையில் இருக்கின்றேன். சந்திப்பு இனிதே நடைபெற என்னுடைய வாழ்த்துகள்.
கடந்த மே மாதம் நடந்த மாதிரி மிகப் பெரிய, உலகம் காணத, இந்த படைப் போதுமா இன்னும் கொஞ்சம் வேண்டுமா என்ற கோஷங்களுடன் நடந்த வலைப் பதிவர் மாநாட்டை இந்த வருடமும் நடத்திவிட வேண்டும் என தம்பி அணிமா ஆசைப் பட்டதால், அதை பற்றி முடிவு செய்வதற்காக இந்த சந்திப்பு என முடிவு செய்யப் பட்டது.
பொருளாதார சிக்கல்கள் எழுந்துள்ளதால், இந்த வருடம் வலைப் பதிவர் அகில உலக மாநாட்டை நடத்துவது பற்றியும், உலக வங்கியில் கடன் வாங்க இயலுமா என்பதுப் பற்றியும் விவாதிப்பதற்காக இந்தப் பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.
மாலை 7 மணியளவில் இந்த சந்திப்பு என ஏகமனதாக ஏற்பாடுச் செய்யப் பட்டு, 7.30 மணியளவில் சந்திப்பு ஆரம்பமானது. (செயலாளர் தன்னுடைய பதிவியின் பந்தாவை காண்பித்துக் கொள்வதற்காக வந்தது லேட்... எப்போதும் போல்..)
பலவிதங்களில் பேசியும், எந்தவிதமான முடிவும் எட்டப் படாததால், தேதி அறிவிக்கப் படாமல் கூட்டம் ஓத்தி வைக்கப்பட்டது.
அப்போது எடுத்தப் படங்கள் உங்கள் பார்வைக்காக..
வலைப் பதிவர் சந்திப்புக்கு வந்த வாசகர் உயர் திரு. மனோஜ் அவர்களை வரவேற்கும் நைஜிரியா வலைப்பதிவு சங்க பொதுச் செயலாளர் இராகவன்.
எங்கள் வலைப்பதிவு சந்திப்புக்கு வந்த வாசகர் உயர் திரு. மனோஜ் அவர்கள் புகைப் படத்திற்கு கொடுத்த போஸ்..
சங்க பொதுச் செயலாளருடன் உயர் திரு. மனோஜ்
சங்கத் தலைவர் மற்றும் செயலாளர்
சங்கத் தலைவருடன் வாசகர் உயர் திரு. மனோஜ்
வெல்கம் டிரிங்ஸ் ???
தம்பி நேசமித்திரனுடன் தொலைப் பேசி உரையாடல்.. சங்க விஷயங்களைப் பற்றிப் பேசப் பட்டது.
சங்கத் தலைவர் ...
மோனோ ஆக்டிங் ??? (என்னோட பதவிக்கு யாரும் போட்டி போடமுடியாது.. )
சும்மா போசுக்காக... என்னதுங்க இது? தெரிஞ்சவங்க யாராவது சொல்லுங்க
பொறுப்பி :
1. மேலுல்ல படங்களை எடுத்தது, தம்பி வடலூரான் கலையரசன் வாங்கிக் கொடுத்த புகைப் படக் கருவி. அதற்கு அவருக்கு ஒரு நன்றி. இந்தப் புகைப் பட கருவி வாங்க எங்களுடன் வந்த தம்பி குசும்பன், சாரதி செய்த அண்ணன் சுந்தர் அவர்களுக்கும் நன்றிகள் பல. இந்த மனுஷனுக்கு ஏன் கேமிரா வாங்கி கொடுத்தீங்க என அவர்கள் மேல் யாரும் கோபப் பட்டு விடாதீர்கள். விதி... வேறு வழியில்லாமல் வாங்கிக் கொடுத்துவிட்டார்கள்.
2. அனைத்து கிளைச் சங்களுக்கும் சங்கப் பொருளாதார நிலைப் பற்றிய நிதி நிலை அறிக்கை தனி மடலில் அனுப்பப்பட்டுள்ளது.
3. நிதி நிலைமை மிக மோசமாக இருப்பதால், அனைத்துச் சங்களுக்கும், தலைமைச் சங்கத்துக்கு அனுப்ப வேண்டிய நிதிகளை உடனடியாக அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப் படுகின்றார்கள்.
4. நிதி நிலைமை சீரான பிறகு, மாநாடு நடத்தப் படும் என்பதை மிகத் தாழ்மையுடன் அறிவிக்க கடமைப் பட்டுள்ளோம்.